Monday 3 February 2020

வாட்ஸப்பை என்ன செய்யப்போகிறது பேஸ்புக்?

தொழிநுட்ப உலகில் பேஸ்புக்கும் வாட்ஸப்பும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் 2014இல் வாட்ஸப்பை 22 பில்லியன் டொலர்களுக்கு வாங்கியது பேஸ்புக். 

அதன் பின்னர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் மற்றும் மெசேஞ்சர் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் முன்னெடுத்தது. ஆனால், அந்த நடவடிக்கை அண்மைக்காலத்தில் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அப்படியென்றால் இணைக்கப்படாதா என்று கேட்கலாம். இணைப்பு நடக்கும். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மிக மெதுவாக நடக்கும். அதற்கு இன்னும் ஐந்து வருடங்களாவது செல்லலாம். 

எனினும், வாட்ஸப்பில் விளம்பரங்களைக் காண்பிக்க பேஸ்புக் முயற்சி எடுத்து வருகிறது. வாட்ஸப் ஸ்டேட்டஸ் மூலமாக விளம்பரங்களைக் காண்பித்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவது பேஸ்புக்கின் திட்டம். 

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பலருடன் பேஸ்புக் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அதிக அளவிலான வாட்ஸப் பயனாளர்கள் உள்ள இந்த நாடுகளில் 'வாட்ஸப் பே' எனும் கட்டணம் செலுத்தும் சேவையை அறிமுகம் செய்வதே இதன் திட்டம். 



அத்துடன், வாடிக்கையாளர்களையும் சில்லறை வணிகங்களையும் இணைக்கும் இலத்திரனியல் வணிகத் தளமான இந்தியாவின் மீஷோவை வாங்கியிருக்கிறது வாட்ஸப். 

வணிகங்கள் உபயோகப்படுத்தக் கூடிய வகையிலான 'வாட்ஸப் பிசினஸ்' சேவையையும் அறிமுகம் செய்து வெற்றி கரமாக நடத்தி வருகிறது பேஸ்புக் நிறுவனம். 

இதேவேளை, தனக்கு சொந்தமான செயலிகளை பேஸ்புக் ஒன்றிணைப்பதற்கு எதிராக அமெரிக்காவில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்குகளின் தீர்ப்பு என்ன விதமாக அமையும்? செயலிகள் ஒன்றிணைக்கப்படுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்...

வாட்ஸப்பை என்ன செய்யப்போகிறது பேஸ்புக்? 
https://sigaram5.blogspot.com/2020/02/fb-what-will-do-with-whatsapp.html 
#Fb #Whatsapp #Instagram #Tech #Business #Ads #Stories #Sigaram